Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாத்மா காந்தி/அன்பால் வெல்லுங்கள்

அன்பால் வெல்லுங்கள்

அன்பால் வெல்லுங்கள்

அன்பால் வெல்லுங்கள்

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
* கோபத்தைக் கோபமின்மையால் வெல்ல வேண்டும் என்கிறார் புத்தர். பதிலுக்குப் பதில் என்று கோபப்பட்டால் எதிரிக்கும் மட்டுமில்லாமல், நமக்குமே தீங்கு செய்து கொள்கிறோம்.

* இடைவிடாத பயிற்சி செய்தால் யாரும் கோபத்தை அடக்கிக் கொள்ள முடியும். மனதில் அன்பு மலர்ந்து விட்டால் கோபம் தானாக மறைந்து விடும்.

* குற்றம் செய்வதில் தான் அவமானம் இருக்கிறதே தவிர, அதற்காக தண்டனை பெறுவதில் இல்லை.

* சந்தேகம் கொள்வது கண்ணியமான பண்பு அல்ல. ஏமாற்றுவதும் நீண்டநாள் நிலைத்திருக்க முடியாது.

* சபதம் செய்து விட்டு அதை மீறுவதை விட, சபதம் செய்யாமல் இருப்பது நல்லது. சபதம் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கிறது.

* மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவது தவறு என்பதை விட பாவச்செயலாகும்.

- காந்திஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us